Monday, June 29, 2009

முதல் வாசம்

எல்லாருக்கும் வணக்கமுங்க... இது தான் என்னோட முதல் பதிவுன்னு சொல்லி உங்கள ஏமாத்த மாட்டேன். நாம இதுக்கு முன்னாடியே ரெண்டு பதிவு ஆரம்பிச்சு அதயெல்லாம் கூடைய போட்டு மூடுனதெல்லாம் இப்போ வரலாறாயிடுச்சுங்க! இதுவும் வரலாறாகாம இருக்கனுமுன்னு உங்க இஷ்ட தெய்வத்தயெல்லாம் வேண்டிக்குங்க. முடிஞ்சா சங்கடப்படாம ஒரு மொட்டை போட்டுக்கிட்டாலும் நல்லது. வேற யாருக்கு?? உங்களுக்குத்தான். ஏன்னா நாங்களாம் (போதும் போதும் விடு அது தான் ஊருக்கே தெரியுமே...). யார்ராது?. ஓஓஓ சாரிங்க இது ஸ்ஸ்ஸ்.. மறுபடியும் சாரிங்க. இவரு நம்ம மனசாட்சிங்க. அடிக்கடி இப்படித்தா எதாவது ஒழறிக்கிட்டே இருப்பாருங்க. இவர முடிஞ்சளவுக்கு கட்டங்கட்டிடுறேன் (என்னயவா???). கொஞ்சம் பாத்து படிச்சுக்குங்க.

என்னப்பத்தின்னா!! வழக்கம்போல சின்ன வயசுல அப்பா கையப்புடிச்சுக்கிட்டு வெத்தல கிடங்குகுள்ள சுத்திட்டு கைய விட்டவுடனே நேரா பொட்டிதட்ட வந்த கும்பல்ல அடியேனும் ஒருவன். மத்தபடி நாங்க ஒண்ணும் எழுத்தாளநெல்லாம் கிடையாது (அதுவும் தெரியும்!!!). ர்ர்ர்ர்ர்ர்ர் (என்ன பல்லுவலியா?). ஸ்ஸ்ஸ்ஸ்... (என்ன புழுக்கமா இருக்கா??). சரி இங்க தொந்தரவு அதிகமா இருக்கு நான் அடுத்த இடுக்கைல பாத்துக்குர்றேன்(இடுக்கு. இடுக்கு..).

குறிப்பு: தமிழ்ல எழுதி ரொம்ப நாளாகுதுங்களா அதனால அதிகமாவே பிழையிருக்கும். அதுக்கெல்லாம் சேத்து கரெக்ட்டா திட்டிட்டு படிச்சுருங்க. அப்புறம் இந்த பின்னூட்டம்ம்ம்ம்.... கொஞ்சம் பாத்து தாராளமாவே போடுங்க...